தந்தைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை!

தந்தைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை. தந்தை  என்பவர், தாய்க்கு

By leena | Published: Jun 21, 2020 10:42 AM

தந்தைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை.

தந்தை  என்பவர், தாய்க்கு நிகரானவர். தாய் நம்மை 10 மாதம் சுமந்து பெற்றால் என்றால், தந்தை அவரது இறுதி மூச்சு உள்ளவரை குழந்தைகளுக்காக வாழ  வேண்டும் என்றும், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்பவர்.

ஒவ்வொரு வருடமும், அன்னையை கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், அதற்க்கு நிகராக தந்தையை கௌரவிக்கும் விதமாக, தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறு நாட்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

நாம் நமது வாழ்வில் சிறிய வேதனையையோ அல்லது அல்லது கஷ்டத்தையோ அனுபவித்தால், நமது தந்தை அதனை பார்த்துக் கொண்டு இருப்பதில்லை. இந்த கஷ்டத்திலிருந்து பிள்ளையை எவ்வாறு தூக்கி விடுவது என யோசித்து, அதற்கான பாதையில் நம்மை வழிநடத்துவார்.

அதே சமயம் தனக்கு ஒரு பிரச்னை வந்தால், அந்த கஷ்டத்தை குழந்தைகளிடம் காட்டிக் கொள்ளாமல், சிரித்த முகத்துடன் குழந்தைகளுடன் பழகுபவர் தான் தந்தை. நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையை கணம் பண்ண வேண்டியது நமது முதல் கடமை ஆகும்.

Step2: Place in ads Display sections

unicc