காற்று மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

காற்று மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை.யூகங்கள் மற்றும் கற்பனையின் அடிப்படையில் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே நமது பகுதி இருக்கிறது.தமிழக மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.