நம்பர் 1 அஞ்சல., நம்பர் 2 கல்வெட்டு ரவி., பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்.!

தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட பேசிய மு.க.ஸ்டாலின்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்டார். இதுகுறித்து பேசிய அவர்,  சமீப காலமாக தமிழகம், புதுவையில் பாஜகவில் இணைந்து கொண்டிருப்பவர்களின் பின்னணி என்ன? என்பதை மத்திய உளவுத்துறை மூலமாக விசாரித்து பாருங்கள், நான் ஆதாரத்துடன் சொல்கிறேன் என்று கூறி, புளியந்தோப்பு பெண் தாதா கஞ்சா வியாபாரி அஞ்சல, இவர் மீது கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள் உள்ளது.

கல்வெட்டு ரவி என்பவர் மீது 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 குற்ற வழக்குகள் இருக்கிறது. புதுவை எழிலரசி, இவர் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர். சீர்காழி சத்யா என்பவர் செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணல் கொள்ளையை தடுப்பவர்களின் தலையை வெட்டி கொலை செய்யும் கூலிப்படை தலைவர்கள் என கூறிய ஸ்டாலின், இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது, பிரதமர் மாதிரி எதை வேணாலும் பேசிவிட்டு போகமாட்டேன் நான் கலைஞரின் மகன் எதையும் ஆதாரத்துடன் தான் பேசுவேன் என கூறியுள்ளார்.

இன்னும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய பாட்டிலே என்னிடம் உள்ளது என கூறிய அவர், சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுவை சோழன், புதுவை விக்கி, பாம் வேலு, மயிலாப்பூர் டோக்கன் ராஜா என்று கூறிய ஸ்டாலின் பெயர்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது என விமர்சித்தார். மேலும், கொரங்கு ஆனந்த், குடவாசல் அருண், சீர்காழி ஆனந்த், சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, ஸ்பீடு பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர், தஞ்சை பாக்கெட் ராஜா, குடைவாசல் சீனு, பல்லு கார்த்திக், பூண்டு மதன் என வரிசையாக பெயர்களை பட்டியலிட்டார்.

இவர்கெல்லாம் யார் என்று தயவு செய்து பிரதமர் மோடியை விசாரியுங்கள், இல்லை உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை விசாரிக்க சொல்லுங்கள் என தெரிவித்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை திமுக மீது பேசுவதை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா தான் என்று மோடி பேசியிருந்தார். மாநிலங்களிலேயே சிறந்த ஆட்சியை கொடுத்தது, இந்த லேடியா, இல்ல குஜராத்தை சேர்ந்த மோடியா என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்டது இன்னமும் ஒலித்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஹரி இஸ் பேக்! தெறிக்கும் ரத்னம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…

5 mins ago

JAM 20024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!

IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…

9 mins ago

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…

42 mins ago

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…

42 mins ago

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

1 hour ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

1 hour ago