நிவர் புயல் உருவாகியது – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது.

மேலும், இந்த புயலானது, இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு அருகே நவ.25ம் தேதி பிற்பகல்  கரையை கடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நவ.24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment