நைட்ரஜன் காற்றால் காருக்கு கிடைக்கும் நன்மைகள்..!

 

சமீப காலத்தில் பெட்ரோல் பம்ப்கள், பஞ்சர் பார்க்கும் இடங்களில் நைட்ரஜன் ஏர் என்று ஒன்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். நைட்ரஜன் ஏரை பிடித்தால் தான் டயருக்கு நல்லது சிலர் கூறுவதை கூட கேட்டிருப்போம். இங்கே அந்த நைட்ரஜன் ஏர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

சாதாரண காற்றிற்கும் நைட்ரஜன் காற்றிற்கும் சிறிது அளவே வித்தியாசம் உள்ளது. சாதாரண காற்றில் 78% சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்ஸிஜன், மற்றம் 1 சதவீதம் இதர காற்று இருக்கும்.

ஆனால் நைட்ரஜன் என்பது முழுவதும் நைட்ரஜன் காற்றால் ஆனது. இது டயரின் சில தன்மைகளை மாற்றியமைக்கும். முக்கியமாக இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் கிடைக்கும் நன்மைகளையும், அதன் பயன்களையும் குறித்து கீழே பார்க்கலாம் .

சாதாரண காற்றில் உள்ள 28 சதவீதமும் 1 சதவீத காற்றும் அதிக சூடு மற்றும் பல்வேறு காரங்களுக்காக வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் டயரில் உள்ள பிரஷர் குறையும். ஆனால் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறைப்பது குறைவு. துள்ளியமான பிரஷர் நவீனமாக நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்காக வந்துள்ள மிஷின்கள் டயரின் பிரஷர் அளவை மிக துள்ளியமாக கணக்கிடுகின்றன.

சாதாரண ஏர் பிடிக்கும் எந்திரங்களில் இந்த அளவு துள்ளியம் இருப்பதில்லை. இதனால் உங்கள் டயருக்கான துள்ளியமான பிரஷர் கிடைக்கும். துரு பிடிக்காமல் இருக்கும் முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடித்தல் ஏற்படாது.

அதே நேரத்தில் சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ரிம்மில் உள்ள இரும்பு ஈரமாகும் சமயங்களில் டியூப்பையும் தாண்டி ரிம்மில் உள்ள இரும்புடன் ரியாக்ட் ஆகி விரைவில் துரு பிடிக்கும். டயர் வாழ்நாள் அதிகரிக்கும் நைட்ரஜன் காற்று முழுமையாக இருந்தால் பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளம். இதனால் டயரின் வாழ்நாள் என்பது அதிகரிக்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment