நிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சீராய்வு மனுத்தாக்கல்

  • டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். 
  • இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு  நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றது.மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல இடங்களில் போராட்டம் வெடித்தது.ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிகழ்வு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனை சீர்திருத்த பள்ளியில் இருக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது.மீதமுள்ளவர்களில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தண்டனை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே நான்குபேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர்.இந்த வழக்கு அங்கு அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.அதில் தலைமை நீதிபதி அமர்வு நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது.ஆனால், தற்போது வரை அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இதற்கு இடையில் இந்த வழக்கில்  தொடர்புடைய குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.தனக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிராக குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார்சிங் மனு தாக்கல் செய்துள்ளார். 

இதையும் படியுங்க : பீகாருக்கு பறந்த உத்தரவு ! 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன ?