மே மாதத்திலிருந்து 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக அளித்த- நிதி பர்மர்..!

இந்த ஆண்டு “சாண்ட் கி ஆங்”  திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தனிக்கு ஒரு ஆண் குழந்தையைப் பிறந்தது. தனது குழந்தைக்குத் தேவையில்லாத அதிகப்படியான பாலை என்ன செய்ய முடியும் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது தனக்கு மிகவும் வேடிக்கையான யோசனைகள் வழங்கப்பட்டதாக ஹிரானந்தனி கூறினார்.

பின்னர், அவரது மகளிர் மருத்துவ நிபுணர் மும்பையில்   மருத்துவமனையை பரிந்துரைத்தார், அதில் தாய்ப்பால் வங்கி இருந்தது. ஆனால் அவர் தனது பாலை வங்கிக்கு நன்கொடையாக வழங்கு தயராக இருந்த சற்று நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு  அறிவிக்கப்பட்டது.

பின்னர்,  மே மாதத்திலிருந்து, ஹிரானந்தனி மருத்துவமனையின் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு (என்.ஐ.சி.யு) சுமார் 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கியுள்ளார். என்.ஐ.சி.யு  இல் உள்ள பெரும்பாலான குழந்தைகள் எடை குறைந்த மற்றும் பெரும்பாலும் தாய்மார்கள் இல்லாமல் இங்கே இன்குபேட்டர்களில் வைக்கப்படுகிறார்கள்.

author avatar
murugan

Leave a Comment