முக்கிய குற்றவாளி கைது..??சிக்குகிறதா முக்கிய தலைகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ரபீன்ஸ் ஹமீதை தேசிய புலனாய்வு அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவரபட்ட ₹15கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இத்தங்க கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் அவருக்கு உதவியதாக சிவசங்கர் ஐஏஎஸ் என வரிசையாக சிக்கிய நிலையில் புலனாய்வு துறையும்அமலாக்கத்துறையும் விசாரணையை தீவிர படுத்தி வந்தது.

சிவசங்கர் IASக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பபட்டது.இந்நிலையில் கிடுகிடுக்கு பிடி விசாரணையி சிவசங்கர் IASதங்கக்கடத்தல் பர்சல் பாஸ்வேர்டு தொடர்பாக பல ரகசிய தகவல்களை கூறியதாக தகவல் வெளியாகியது.

அடுத்தடுத்து கேரள தங்ககடத்தல் விவகாரத்தில் மர்மங்கள் வெளியாகிய வருவதால் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தங்க கடத்தலுக்கு நிதி திரட்டி ரபீன்ஸ் மூளையாக செயல்பட்டார்.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக  அவர் தேடப்பட்டு வந்தார்.

ரபீன்ஸ் ஹமீதை துபாயில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் குழு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொச்சி விமான நிலையத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முக்கிய குற்றவாளியை தேடி பிடித்த என்ஐஏ, விசாரணையில் முக்கிய தலைகளின் பெயர்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
kavitha