தெலுங்கில் ரிலீசிற்கு ரெடியாகிவிட்டது சூர்யாவின் ‘என்.ஜி.கே’!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரிலீசிற்கு ரெடி ஆகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.இப்பட ட்ரைலர் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இப்படம் மே 31இல் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா வெளியீட்டு உரிமையை ஸ்ரீ சத்ய சாய் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. சூர்யாவிற்கு தமிழில் இருக்கும் அதே அளவு மார்க்கெட் தெலுங்கிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment