நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது “என்.ஜி.கே” படம் திரைக்கு வர ரெடியாகி விட்டது. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இந்த படம் வரும் மே 31 ந் தேதி வெளியாக இருக்கிறது.
இதையடுத்து தற்போது இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை கொண்ட படமாக இந்த படம் தயாராகி இருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.