ரஷ்யாவில் மாயமான அடுத்த விமானம்..!-ஒரே மாதத்தில் 2 விமானங்கள் மாயம்..!

ரஷ்யாவில் தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 6 ஆம் தேதி ஆன்-26 ரக விமானம் ரேடார் பார்வையிலிருந்து மறைந்தது. பின்னர் இது குறித்து தேடும் பணியில் ஈடுபட்ட பின்பு தான் விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

தற்போது ஒரே மாதத்தில் அடுத்தபடியாக மீண்டும் ஒரு விமானம் காணாமல் போய் உள்ளது. இந்த விமானம் சைபீரியா பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானத்தில் 13 பேர் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.