Connect with us

பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை கண்ட நியூஸிலாந்து ..!!

NZvPNG

கிரிக்கெட்

பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை கண்ட நியூஸிலாந்து ..!!

டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது.

C பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த 2 அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறி இருக்கின்றன. இருப்பினும், இந்த இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற இந்த டி20 உலகக்கோப்பையின் 39-வது போட்டியாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பப்புவா நியூ கினி அணி பேட்டிங் களமிறங்கியது, தொடக்கத்தில் இருந்தே பப்புவா நியூ கினி அணி சரியாக விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, மிக மோசமாக தடுமாறியது. மேலும், நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சும் மிகச்சிறப்பாக அமைந்ததால் பப்புவா நியூ கினி அணியால் சமாளிக்கவும் முடியாமல் தடுமாறியது.

இதன் காரணமாக பாபாவை நியூ கினி அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூஸிலாந்து அணியில் பெர்குசன் 3 விக்கெட்டுகளும், சோதி, சௌதி மற்றும் போல்ட் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.

அதனை தொடர்ந்து, மிகச்சிறிய இலக்கான 79 ரன்களை எடுக்க நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள்  தொடக்கம் முதலே தட்டி தட்டியும், தேவையான நேரத்தில் பவுண்டரியும் அடித்து போட்டியை அவர்கள் வசமே வைத்திருந்தனர்.

மேலும், 2 விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் அவர்களது பொறுமையான ஆட்டத்தால் போட்டியை பப்புவா நியூ கினியின் பக்கம் சாய விடாமல் வைத்திருந்தனர்.  அதிலும் டெவான் கான்வே 32 பந்துக்கு 35 ரன்கள் எடுத்து அணிக்கு தூணாக பேட்டிங்கில் செயல்பட்டார்.

மிக சிறந்த கிரிக்கெட் பேட்டிங்கை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 79 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் தொடரிலிருந்து  வெளியேறிய நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in கிரிக்கெட்

To Top