வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை.வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற ஜூலை மாதம்  படப்பிடிப்பு முழுவதையும் படக்குழு முடிக்க உள்ளதாம் கூறப்படுகிறது.

மேலும் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு நாளை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.