ஜகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!

  • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் படத்திற்கான அணைந்து பாடல்களும் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் தற்போது படத்திற்கான ஆடியோ வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் 8 பாடல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.