பணியிட மாற்றம் செய்ய பணம் கேட்பதாக புதிய செவிலியர்கள் புகார்.!

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிக்காக ஆய்வக டெக்னீசியன் 1,500 பேர், மருத்துவர்கள் 500 பேர், செவிலியர்கள் 1,000 பேர் விரைவில் நியமிக்கப்படுவர் என சமீபத்தில்  அறிவிக்கப்பட்டது.

இதையெடுத்து திருச்சி மாவட்டத்தில்  39 செவிலியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பணியிடத்துக்கு பதிலாக நீங்கள் விரும்பும் பணியிடத்தை மாற்றித் தருகிறேன் என கூறி பணம் கேட்டுள்ளார். இது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அவர்கள் கூறினர்.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர் கூறுகையில் , புதிதாக தேர்வு செய்யப்பட்ட 39 செவிலியர்களில் ஒருவர் பணி வேண்டாம் என கூறியுள்ளார். 31 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். மற்ற 7 பேரை பணியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவருக்கும், அரசின் துறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை , புகார் வந்தால்  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

author avatar
murugan