வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை மையம்!

மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 10ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த பகுதி தீவிரமடையுமா அல்லது மண்டலமாகுமா போன்ற தற்போதைய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில் தமிழக்தில் மீண்டும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை இன்று முதல் படிப்படியாக விலக தொடங்கும் நிலையில், இதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிக கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறியுள்ளது. மேலும், லட்சத்தீவு, மாலத்தீவு கடல்பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்