புது தில்லி-கத்ராவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜன.,1 முதல் தொடக்கம்.!

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில மாதங்களுக்குப் பிறகு புது தில்லி-கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கபடுகிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பக்கத்தில்,” பக்தர்களை வைஷ்ண தேவி சன்னதிக்கு அழைத்துச் செல்லும் டெல்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கும். இந்தியாவின் நவீன ரயில்களில் ஒன்று மீண்டும் பக்தர்களையும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புது தில்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் கொடியிடப்பட்டது. இந்த ரயில் கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பயணிகளுக்காக தனது வழக்கமான சேவைகளைத் தொடங்கியது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றுநோய் காரணமாக வந்தே பாரதத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, 1,768 இல் 1,089 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.