டெல்லி: கொரோனாவால் 26 வயது மருத்துவர் உயிரிழப்பு..!

டெல்லியில்,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 26 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வரிசையில்,டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவரான அனாஸ் முஜாகித்(வயது 26).குருதேவ் பகதூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.இதனால்,வீட்டில் தங்காமல் அருகில் உள்ள ஹோட்டலில் அனாஸ் தங்கியுள்ளார்.

மேலும்,ரம்ஜான் நோன்பு இருந்து வந்த அனாஸ்,’இப்தார்’ கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் தன் வீட்டிற்கு சென்றுள்ளார்.அதை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பி வரும் வழியில் அனாஸ் மயங்கி வழுந்தார்.

இதனையடுத்து,அனாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்ததில் இரவு 8 மணிக்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அனாஸுக்கு மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி அனாஸ் அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 26 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.