ஆங் சான் சூகி மீது புதிய குற்றசாட்டு….! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறை…!

  • மியான்மர் நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றசாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது.
  • குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க அந்நாட்டு சட்டத்தில் வழி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி, மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தி, ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் பின் மைண்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை இராணுவம் வீட்டு காவலில் வைத்தது.

இந்நிலையில், ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது உட்பட 6 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, மியான்மர் நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றசாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக  பயன்படுத்தி,அவர் ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, அதிகாரத்தை பயன்படுத்தி பணம், தங்கம் போன்றவற்றை பெற்றதாகவும் ஆங் சான் சூகி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க அந்நாட்டு சட்டத்தில் வழி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.