நேபாளம் விமான விபத்து: 22 பேர் மாயம்.! 14 உடல்கள் மீட்பு.!

நேபாளத்தின் போகாராவில் இருந்து  இரண்டு ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் ,13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் மாயமானது.

இதனைத் தொடர்ந்து, நேபாள ராணுவம் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என அதிகாரிகள் தகவல் தெரிவித்து விட்டனர். இதில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன அடையாளம் தெரியாதபடி, உடல்கள் சீதைந்துள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

இதில் மற்றோரு பெரிய சோகம் என்னவென்றால், தனுஷாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment