பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை – அமைச்சர் ஷா முகமது குரேஷி

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தற்போது சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமீப காலமாக நடத்தப்பட்ட பதன்கோட் விமான நிலைய தாக்குதல், யூரியிலுள்ள ராணுவ முகாம் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்துவதால் இரு நாட்டு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று மத்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்ஷ் முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்த பேட்டியில், இந்தியாவுடன் வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் தற்போது அதற்கான சூழலும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்