Connect with us

நீட் வினாத்தாள் கசிவு : 2 பேரை கைது செய்தது சிபிஐ.!

NEET-UG paper leak

இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு : 2 பேரை கைது செய்தது சிபிஐ.!

புது டெல்லி : பீகாரில் நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ கைது செய்வதற்கு முன், பீகார், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் சிலரையும் போலீசார் கைது செய்தனர். தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக தனக்கும் இன்னும் சிலருக்கும் வினாத்தாளின் நகல் கிடைத்ததாகக் கூறிய ஒரு ஆர்வலரும் இதில் அடங்குவர். இதுவரை நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் பாரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ சிறப்புக் குழுக்களை அமைத்தது மத்திய அரசு. இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, நியாயமான விசாரணைக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கூறியதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

Continue Reading

More in இந்தியா

To Top