உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் “0” – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக 2023ல் முதுகலை நீட் படிப்புகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது.

இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5,000 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், 1,000 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு நிரப்ப நீட் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு பற்றிய தேதி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்சிறப்பு மருத்துவ படிப்பு ஆண்டு கட்டணம் தனியார் கல்லூரிகளில் ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வசூல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட் ஆஃப் குறைப்பு குறித்து தேசியத் தேர்வுகள் வாரியம் கூறியதாவது, முதுகலைப் படிப்பை முடித்து, நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வை 2023-ல் எழுதி இருந்தால், அவர்கள் நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.!

இதனிடையே, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதி தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (NEET UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர்.

இதுபோன்று, சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது. அந்தவகையில், தேசியத் தேர்வுகள் வாரியம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான தேர்வை கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தி, முடிவுகள் அக். 15ம் தேதி வெளியானது. தற்போது, சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு எழுதி இருந்தாலே, சீட் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்