நீட், ஜே.இ.இ தேர்வுகள் 50% பாடத்திட்டங்களுடன் நடத்தப்பட வேண்டும் – மணீஷ் சிசோடியா

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தலைமையில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி.யின் 57 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநிலக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில், டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கலந்துகொண்டார். அப்போது, கொரோனா தொற்றுநோய் காரணமாக,  மாணவர்கள் பள்ளி நாட்களை தொடர்ந்து இழப்பதால் அனைத்து வகுப்பினருக்கான பாடத்திட்டங்கள் 50 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு, நுழைவுத் தேர்வுகள் ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ’ போன்றவை குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் என்று முதல்வர் “மணீஷ் சிசோடியா” பரிந்துரைத்தார்.

சிபிஎஸ் இ-க்கு மே 2021-க்கு முன்னர் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தக்கூடாது. இதனால், மாணவர்கள் படிக்க இன்னும் சிறிது நேரம் கிடைக்கும் என்று மனிஷ் சிசோடியா மேலும் கூறினார்.  வழக்கமாக சிபிஎஸ்இ 12- வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan