நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு…!

இன்று நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. 

நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யுமாறு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.