#NationalGames2022: தேசிய விளையாட்டு போட்டி – தமிழகம் 4வது இடம்!

தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்துக்கு முன்னேற்றம். 

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி, தங்கம் 18, வெள்ளி 17, வெண்கலம் 18 என மொத்தம் 53 பதக்கங்களை வென்று தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், services sports control board 40 தங்க பதக்கங்களுடன் முதல் இடத்திலும், ஹரியானா 25 தங்க பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா 24 தங்க பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment