நாதன் கொல்டர் அதிரடி ஆட்டத்தால் 289 ரன்கள் இலக்காக வைத்த ஆஸ்திரேலியா

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதி வருகிறது.இப்போட்டியானது  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ), டேவிட் வார்னர் களமிறங்கினார்.ஆட்டம் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் 6  ரன்னிலும் , டேவிட் வார்னர் 3 ரன்னிலும் வெளியேறினார்.
பின்னர்  ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா களமிறங்கி விளையாட சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேற பரிதமான நிலையில் ஆஸ்திரேலியா அணி இருக்கையில் ஸ்டீவன் ஸ்மித் அணியின் எண்ணிக்கை நிதானமாக விளையாடி உயர்த்தினார்.

பிறகு களமிறங்கிய க்ளென் மாக்ஸ்வெல் 0 ரன்னிலும் , மார்கஸ் ஸ்டோனெனிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பின்னர் அலெக்ஸ் கேரி, ஸ்டீவன் ஸ்மித் இருவரின்  கூட்டணியில் ஸ்மித் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இவர்களின் கூட்டணியை ஆண்ட்ரே ரஸல் பிரித்தார்.

அதனால் அலெக்ஸ் கேரி 45 ரன்னில் வெளியேறினர்.பிறகு களமிறங்கிய நாதன் கொல்டர் , ஸ்மித் கூட்டணியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக நாதன் கொல்டர் 92 ரன்னும், ஸ்மித் 73 ரன்னும் குவித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கார்லோஸ் ப்ராத்வாட் 3 விக்கெட்டையும் , ஆண்ட்ரே ரஸல் , ஓஷேன் தாமஸ் , ஷெல்டன் கோட்ரெல் தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். 289 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்க உள்ளது.
 

author avatar
murugan