இந்தியாவின் மிக நீளமான கேபிள் தங்கும் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தின் துவாரகா நகரில் ரூ. 978 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். புனித யாத்திரை தலமான துவாரகாவில் ஓகா மற்றும் பெய்ட் இடையே 2.5 கிலோமீட்டர் நீளத்தில் பாலம் அமைந்துள்ளது. துவாரகாதீஷ் கோவிலுக்கு வருகை தரும் உள்ளூர்வாசிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு இந்த பாலம் மிகவும் உபயோகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவுடன் பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்னர், துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்தி வந்தனர். ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன் நடைபாதை பகவத் கீதையின் வாசகங்கள் மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக நீளமான கேபிள் தங்கும் பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

பாஜக தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

உள்ளூர்வாசிகளும், யாத்ரீகர்களும் ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலம் திறக்கப்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து நபர் ஒருவர் கூறுகையில், “இந்தப் பாலம், குஜராத் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது, ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலம் எங்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும். இது சுற்றுலா துறையை மேம்படுத்தும்” என கூறினார்.

Leave a Comment