கின்னஸ் உலக சாதனையில் நரேந்திரமோடி மைதானம்… கடந்த ஐபிஎல்-இல் இமாலய சாதனை.!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ஐபிஎல் டி-20க்காக கின்னஸ் உலகசாதனையில் இடம்பிடித்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய டி-20 ஆட்டத்தை அதிக மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டதற்காக கின்னஸ் உலகசாதனையில் இடம்பிடித்துள்ளது.

29 மே 2022 அன்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் 1,01,566 பார்வையாளர்கள் மைதானத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்தியர்கள் அனைவர்க்கும் இது பெருமையான தருணம். ரசிகர்களின் ஈடு இணையற்ற ஆர்வம் மற்றும் ஆதரவுக்கு நன்றி என பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இந்த சாதனையைப் பகிர்ந்து பிரம்மாண்டமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அதிகம் பேர் (101,566 பேர்) ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

;

author avatar
Muthu Kumar

Leave a Comment