அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” படத்தின் பெயர் மாற்றம்..!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” திரைப்படத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளனர். 

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லக்ஷ்மி பாம். இந்த படத்தில் அக்‌ஷய் குமாருக்கு  ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் 9 வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த லக்ஷ்மி பாம் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 9ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பெயர் லட்சுமி தேவி மீது அவமரியாதை காட்டுவதாகவும் இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்து வதாகவும் கர்னி சோனா என்ற இந்து அமைப்பு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது,

இந்த நிலையில் இந்த எதிர்ப்பை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்துரையாடிய பின்னர் படத்தின் தலைப்பை ‘லக்ஷ்மி” என வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.