மழையால் முடங்கும் மும்பை !18 பேர் உயிரிழப்பு

கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. இந்த  பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது.  கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் முடங்கி போய் உள்ளது .தொடர் மழை காரணமாக மும்பை  நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மும்பையில் கனமழை காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின்  ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

இதனால்  மும்பையில்  பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜூலை 2,4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில்  அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.