தல இல்லாத சூப்பர் கிங்க்ஸை சொந்த மண்ணில் வீழ்த்திய மும்பை அணி!

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி.
கேப்டன் தோனி இல்லாததால் ரெய்னா கேப்டன் பொறுப்பில் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் டுப்ளிஸிஸ், ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.

இதன் பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா 67 ரன், லூயிஸ் 32 ரன்கள் எடுத்தனர். இதன் பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்குடன் களமிறங்கி உள்ளது.

156 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ஷேன் வாட்சன் 8 ரன்னிலும், முரளி விஜய் 38 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா (கே) 2 ரன்னிலும், அம்பதி ராயுடு (விக்கெட்) 0 ரன்னிலும், த்ரூவ் ஷோரி 5 ரன்னிலும், கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், டுவேய் பிராவோ 20 ரன்னிலும், மிட்செல் சாண்ட்னர் 22 ரன்னிலும், தீபக் சாஹார் 0 ரன்னிலும், ஹர்பஜன் சிங் 1 ரன்னிலும் அவுட்டாகி மும்பை அணியிடம் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டனர். லீக் போட்டியில் இருமுறையும் மும்பையிடம் தோற்று மோசமான சாதனையை வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment