ரோகித் சர்மாவிற்கு அபாராதம்: எத்தனை லட்சம் தெரியுமா? ஐபிஎல் ஆரம்பமே அதகளம்!

  • மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது.
  • பஞ்சாப் அணி சார்பில் முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஆன்ட்ரு டை ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் சிறப்பாக அமைந்தது.தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி-காக் களமிறங்கினார்கள்.அதிரடியாக விளையாடிய இருவரும் ஒருகட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.ரோகித் 32 ரன்களிலும்,டி-காக் 60 ரன்களிலும் வெளியேறினார்கள்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஜொலிக்க தவறினார்கள்.யுவராஜ் 18 ,சூரியகுமார் 11,பொல்லார்ட் 7,க்ருனால் பாண்டியா 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.     ஓரளவு தாக்கு பிடித்த ஹர்டிக் பாண்டியா 31 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீசுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அதிக நேரம் எடுத்து கொண்டதால் அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த தொடரிலும் பெங்களூர் அணியுடனான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரோஹித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Srimahath

Leave a Comment