அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியது!

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியது.

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் காவல் நிலையத்தில், ரிபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த புகாரில், மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில், குழந்தை கடத்தல்காரர்கள் என்ற புரளியின் பேரில் 2 சாதுக்களும் அவர்களின் கார் ஓட்டுநரும் கடந்த ஏப்ரலில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாகவும், ஊரடங்கு காலத்தில் பாந்த்ரா ரயில் நிலையம் முன்பு புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டிருந்தது தொடர்பாகவும் ரிபப்ளிக் டி.வி.யில் வெளியான கருத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

அர்னாப் கோஸ்வாமி, இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோஸ்வாமிக்கு எதிரான புகார்கள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார்.

மேலும், மகாராஷ்டிர அரசு சார்பில், “பத்திரிகையாளருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒருவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூற உரிமையில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  ஆனால் இந்த குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லை எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றம் இரண்டு  எஃப்.ஐ.ஆர்களையும் நீக்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.