இரவோடு இரவாக இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஸ்தூபி..!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் ஸ்தூபி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் ஸ்தூபி புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்தனர். முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக வளாகத்தில்  காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுடன் தான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த நினைவு ஸ்தூபி இடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என பயணம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திய நிலையில், தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இருந்த நினைவு ஸ்தூபி இடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan