குடியுரிமை சட்டத்திற்க்கு வாய்ப்பே இல்லை… ம,பி முதல்வர் அதிரடி அறிவிப்பு…

  • தேசிய குடியுரிமை திருத்த விவகாரம் எதிரொலி.
  • காங்கிரஸ் ஆட்சியில் ஆட்சியில் இருக்கும் வரை மத்தியப் பிரதேசத மாநிலத்தில்  தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட மாட்டோம்  என அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி நடைபெற்றது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்பதை தெளிவுபடுத்திப் பேசிய அம்மாநில முதல்வர் கமல்நாத், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது  பன்முகத்தன்மை கலாசாரத்தினால் உலகளவில் இந்தியா அறியப்படுகிறது. ஆனால், என்ஆர்சி என்பது இந்தியாவின் இந்தத் தனித்துவங்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலாகும். நான்  40 ஆண்டுகளாக அரசியலில் எம்எல்ஏ-வாக உள்ளேன். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதலைத் தொடுக்கும்  சட்டங்களை நான் பார்த்ததே கிடையாது. தற்போது நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. மக்கள் வேலைகளை இழக்கின்றனர். விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற  விலை கிடைப்பதில்லை. ஆனால், மத்திய அரசு இதில் கவனம் செலுத்தாமல், மக்களின் கவனத்தை என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீது திருப்புகிறது.  என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவையே தெரிவிக்கிறது. ஆனால், அதை என்ஆர்சியுடன் இணைக்கக் கூடாது” என்றார்.  மேலும், என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்குப் பதிலளித்த முதல்வர் கமல்நாத், “மோடி எங்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைக்கிறாரா? என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்துத் திட்டங்களும், உள்நோக்கமும் எங்களுக்கும்  தெரியும்” என்றார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kaliraj

Recent Posts

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

19 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

23 mins ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

33 mins ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

52 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

3 hours ago