புதிய வடிவில் கலமிரங்கும் மோட்டோ இ5 பிளஸ்..!

 

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6, ஜி6 பிளே மற்றும் ஜி6 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் மோட்டோ இ5 பிளே மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது அந்நிறுவனம்.

மோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது மோட்டோ ஜி6 சீரிஸ் மற்றும் மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்.

மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் எல்சிடி டச் ஸ்கீரின் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440×720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ இ5 பிளஸ் சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 12எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,700-ஆக உள்ளது.

மோட்டோ இ5 பிளே சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment