கண்டமாக மாறிய கடன்- அரளி விதையை அரைத்து 2 மகள்களுக்கு கொடுத்த தாய் – தற்கொலை

  • ஒரு குடும்பத்திற்கு கண்டமாக மாறிய கடன் 
  • கடன் பிரச்சணை  காரணமாக அரளி விதையை அரைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற பரிதாபம் அரங்கேறியுள்ளது.

சேலத்தில் கடன் பிரச்சணையால் தான் பெற்றெடுத்த இரு மகள்களுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு உடன் தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் இவருடைய மனைவி கவிதா இவர்கள் இருவருக்கும் திவ்யாஸ்ரீ , ஸ்ரீமதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையின் கல்வி மற்றும் குடும்பச் செலவுக்காக 2 லட்ச ரூபாயை சிலரிடம் கடனாக வாங்கி உள்ளார்.

கடனை சரிவரக் கட்ட முடியாமல் போகவே கடன் குடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் சத்தம் போட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த பிரச்சணைத் தொடர்பாக உறவினர் ஒருவரிடம் பணம் கேட்பதற்காக சங்கர் வீட்டை விட்டு சென்றுள்ளார்.கடும் மன உலைச்சலில் இருந்த கவிதா தனது இரு மகள்களுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு தானும் அதனை உண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே  கவிதா உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூத்த மகள் திவ்யஸ்ரீ பரிதபமாக உயிரிழந்தார்.இளைய மகள் ஸ்ரீமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடன் பிரச்சணை ஒரு குடும்பத்திற்கு கண்டமாக மாறியது மட்டுமல்லாமல் அக்குடும்பத்தையே அழித்ததுள்ளது .

 

 

author avatar
kavitha