நாமக்கல்லில் அதிர்ச்சி.! ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.!

நாமக்கல்லில் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைவீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த 30ஆம் தேதியன்று இரவு பாரோட்டா சாப்பிட்டதில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக கூறி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும், 30க்கும் மேற்பட்டோர் பரோட்டா சாப்பிட்டு சிகிச்சைக்கு வந்ததை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தெரிவிக்காததால் மருத்துவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.