ஒரே வாரத்தில் முடக்கப்பட்ட 22 லட்சத்துக்கும் மேற்பட்ட PUBG கணக்குகள்.!

பப்ஜி தொடரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி 22 லட்சத்துக்கும் அதிகமான பப்ஜி கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கமுடையவர்கள். அந்த வகையில் அனைவரையும் ஈர்த்துள்ள ஆன்லைன் கேம் PUBG. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் இந்த கேம்மில் அடிக்ட் ஆகியுள்ளனர். தூக்கமில்லாமல் விளையாடும் இந்த கேம்மினால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்கும் வகையில் இ-ஸ்போர்ட்ஸ் தரப்பில் பப்ஜி தொடர் நடைப்பெற்றிருந்தது.

அதில் முறைகேடுகள் நடப்பதாக கூறி புகார்கள் எழுந்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் வேகம் மற்றும் தானியங்கி முறைகளில் குறி வைத்து முறைகேடு செய்வது,எதிரிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக எக்ஸ் – ரே விஷன் பயன்படுத்துவது உள்ளிட்ட திறன்களை முறைகேடாக அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல்  14 சாதனங்களிலிருந்து முறைகேட்டில் ஈடுபட்ட 22,73000 கணக்குகளை ஒரே வாரத்தில் அந்நிறுவனம் முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.