பிரபல இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி.!

பிரபல இயக்குநரான கார்த்திக் நரேனின் படத்தில் வாங்கி தருவதாக வாட்ஸ்அப்பில்

By ragi | Published: Jun 04, 2020 04:24 PM

பிரபல இயக்குநரான கார்த்திக் நரேனின் படத்தில் வாங்கி தருவதாக வாட்ஸ்அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. அதனை தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா ஆகியோரை வைத்து மாபியா படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இந்த படத்தின் இசை வெளியீட்டை பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கும், தொழில்நுட்ப பணிகளை செய்வதற்கும் வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறி வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியதாவது, இப்போது ஒரு செய்தி தன் கண்ணில் பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து எனது அடுத்த படத்தில் பணிபுரிய வாங்கி தருவதாக கூறி பண வாங்கும் நபரை நம்ப வேண்டாம் என்றும், அந்த எண்ணிலிருந்து அவ்வாறு ஏதேனும் வந்தால் பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc