உலகக்கோப்பையில் அதிக ஓவரை மெய்டன் செய்த பாகிஸ்தான் வீரர்களில் முகமது அமீர் முதலிடம் !

நேற்றைய நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ,மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது.
ஒரு போட்டியில் மழையால் ரத்தானது. இதனால் புள்ளி பட்டியலில் ஐந்து புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.மேலும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களில் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ஓவரை மெய்டன் செய்த வீரர்களில் முகமது அமீர் முதலிடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி எதிரான நேற்று நடந்த போட்டியில் ஒரு மெய்டன் செய்தார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் நான்கு ஓவர் மெய்டன் செய்து முதலிடத்தில் உள்ளார்.
Mohammad Amir: 4
Wahab Riaz: 1
Shadab Khan: 1

author avatar
murugan