மலேசியாவின் புதிய பிரதமராக நாளை பொறுப்பேற்க உள்ள மொகைதீன் யாசின்..!

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது கடந்த 24-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார்.  பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார்.

இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பணியாற்றினார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மகாதீருக்கு வயது 95  என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk