ஆட்சியை தக்கவைக்க மோடி போடும் மாஸ்டர் பிளான் ..!

2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி மூன்று திட்டங்களை வருகிற பாரளுமன்ற கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.

2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை மனதில் கொண்டே அனைத்து கட்சிகளும் தங்களது காயை நகர்த்தி வருகின்றன. அதே போல் பாஜகவும் தங்கள் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல திட்டங்களை நிறை வேற்றவுள்ளது. அதில் ஒரு பகுதியாக வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் மூன்று திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

Image result for ஆட்சியை தக்கவைக்க மோடி போடும் மாஸ்டர் பிளான் ..!அத்திட்டங்கள் முறையே முதியோர் உதவித் தொகை திட்டம், வாழ்நாள் காப்பீட்டு திட்டம், கர்பிணி பெண்களுக்கான நல திட்டம் என மூன்று திட்டத்தை அறிவிக்க உள்ளார். இதனை நாட்டில் உள்ள 50 கோடிக்கு மேலான மக்களை சென்றடையும் வகையில் இதனை அறிமுகம் செய்ய உள்ளார்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் நிரந்திர மற்றும் ஒப்பந்த பணியார்களுக்கும் சென்றடைய 15 தொழிலாளர் நல திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய மசோதா கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார். இவை வருகிற பராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர் கட்சிகளும் ஒரணி திரளுவதாலும், பணமதிப்பிழக்கம் பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு என மக்களிடம் இருக்கும் அதிருப்தியை சமாளிக்க இத்திட்டங்கள் உதவும் என மோடி நம்புகிறாராம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment