அமெரிக்காவில் எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எரிசக்தி துறையினரை சந்தித்தார் மோடி !

பிரதமர் மோடி ஒரு வார காலமாக அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்று பயணத்தில் முதலில் மோடி ஹூஸ்டன் நகரில் நடை பெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவின் எரிசக்தி நிலையமாக இருக்கும் ஹூஸ்டன் நகரம் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம்.  இது அமெரிக்காவின் 4 வது அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நகரத்தில் 500 எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இருக்கிறது.இங்கு நாள் ஒன்றுக்கு 23 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் 9 இருக்கிறது.

இந்த நகரில் முதல் நிகழ்ச்சியாக உலகளாவிய ஏரி சக்தி நிறுவங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வட்ட மேசை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த நிகழ்வில் பீபி, எக்ஸான் மொபில், ஸ்குளும்பெர்கர் ,பேக்கர் ஹியூஸ் ,வின்மார் இன்டெர் நேஷனல் உள்ளிட்ட 17  உலகளாவிய எரிசக்தி நிறுவனகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் இந்தியாவிற்காக அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரும் கலந்து கொண்டார். இந்திய தரப்பில் இந்த நிகழ்வில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ,வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கலந்து கொண்டார்கள்.மேலும் இந்த நிகழ்வில் அமெரிக்காவிற்காக இந்திய  தூதர் ஹர்சவர்தன் சிரிங்லா கலந்து கொண்டார்.

இந்த 17 நிறுவனங்களும் உலகமெங்கும் உள்ள 150 நாடுகளில் 1 லட்சம் கோடி டாலர் நிகர மதிப்பினைகொண்டுள்ளது.

இந்த வட்ட மேஜை கூட்டத்தில் எரிசக்தி பாதுகாப்பாகவும் , பரஸ்பர  முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும், இந்தியாவும் , அமெரிக்காவும் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்த விவாதம் முக்கிய இடம் பிடித்தது.

இந்தியாவில் தங்களது காலடி தடங்களை மேம்படுத்துவது பற்றி விவாதித்த எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் , இந்த துறையில் இந்தியா கட்டுப்பாடுகளை தகர்த்தி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டினார்.

இதற்காக அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார்கள்.இந்திய ,அமெரிக்க வர்த்தக உறவில் எரிசக்தித்துறை புதிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கூட்டத்தின் போது , பிரதமர் மோடி முன்னிலையில் அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனத்துடன் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி பங்கு முதலீடுகள் வாயிலாக இறக்குமதி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெல்லூரியன் நிறுவனம் அமைக்கவுள்ள டிரிப்வுட் எல்.என்.ஜி ஏற்றுமதி முனையத்தில் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் 2 1/2 பில்லியன் டாலர் (சுமார் ரூ .17 ஆயிரத்து 750 கோடி) முதலீடு செய்யும்.

40 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) டெல்லூரியன் நிறுவனம் ,இந்தியாவிற்கு வழங்கும். இதற்கான இறுதி ஒப்பந்தம் ,அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 தேதிக்குள் கையெழுத்தாகும்.

இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் , “ஹூஸ்டன் நகருக்கு  வந்து விட்டு ,எரிசக்தி பற்றி பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லை. முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை அற்புதமான கலந்துரையாடல் வாய்த்தது. எரிசக்தி துறையில் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்காக வழிமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம்: டெல்லூரியன் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.