டூவீலர் மோதியதால் மூச்சடைத்து ரோட்டில் விழுந்த குட்டி யானை!

சாலையில் வேகமாக வந்த டூவீலர் எதிர்பாராதவிதமாக குட்டியானை மீது மோதியதில் சாலையில் மயக்க நிலையில் மூச்சடைத்து விழுந்த குட்டி யானை அனுபவம் வாய்ந்த சிபிஆர் முதலுதவி நிபுணர் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள சந்தாபுரம் எனும் மாகாணத்தில் குட்டியானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சித்தபோது வேகமாக வந்த டூவீலர் ஒன்று குட்டி யானை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த இளைஞனும், குட்டி யானையும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட இளைஞர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குட்டியானை விழுந்த இடத்திலேயே மயக்க நிலையில் மூச்சடைத்து அசைவற்று கடந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்த வனவிலங்குகளை மீட்பதில் அனுபவம் வாய்ந்த மன ஸ்ரீவட் என்பவர் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டு குட்டியானை மயக்கமடைந்த சுவாசிக்க முடியாமல் இருப்பதை அறிந்து கொண்டு சிபிஆர் முதல் உதவி செய்துள்ளார். மார்பின் மீது கைகளை வைத்து கடினமாகவும் வேகமாகவும் அழுத்தம் கொடுத்தவர், இரண்டு நிமிடங்கள் வரை இவ்வாறு செய்ததும் மீண்டும் யானை குட்டி சுவாசிக்க தொடங்கியுள்ளது. சீரான இதயத் துடிப்பு வந்த பின் யானை எழுந்து நிற்க முயன்றதை அடுத்து குட்டி யானை வாகனத்தில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று நலம் அடைந்த பின்பு விபத்து நடந்த இடத்திற்கு அருகில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்துடன் சேர்த்துள்ளனர். அங்கு அந்த குட்டி யானையின் தாய் அந்த குட்டி யானையை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal