12 மணிநேர வேலை செயல்படுத்தபடுமா.? தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

12 மணிநேர வேலை செய்யம் வகையில் திருத்தப்பட்ட தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். 

கடந்த வெள்ளிகிழமை தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்த சட்டமானது திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது தொழிலாளர்களை 12 மணிநேரம் வரையில் வேலை செய்ய தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனுமதிக்கலாம் என்ற படி குறிப்பிட்ட நிபந்தனைகளோடு தொழிற்சாலைகளுக்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

ஆனால், இந்த சட்டமானது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை தட்டிப்பறிக்கும் செயலாகும் எனவும், 12 மணிநேர வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுவர் என பல்வேறு காரணங்கள் கூறி எதிர்கட்சியினர், தொழிலாளர் நல தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக என கூட்டணி கட்சியினரே சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டம் நிறைவேற்றும் சமயத்தில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, இன்று தமிழக அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ள முக்கியமான தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  தமிழக அமைச்சர்கள் ஏ.வ .வேலு, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் இந்த பேச்சுவார்தையில் ஈடுபட உள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை திருத்த சட்டம் பற்றி அமைச்சர்கள் விளக்கம் கொடுப்பார்கள் எனவும், தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment