நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..!

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

மறைந்த தமிழ் திரையுலக காமெடி நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழும் நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 1984-இல் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மயில்சாமி இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் கமலின் அபூர்வ சகோதரர்கள் ரஜினிகாந்தின் பணக்காரன் கில்லி, தூள்  உள்ளிட்ட பல படங்கள் அவரது திரை வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன.

mayilsamy

விவேக் வடிவேலு உள்ளிட்டவர்களுடன் நடித்த மயில்சாமி ரசிகர்களை தனது அற்புதமான  நகைச்சுவை திறமையால் கவர்ந்தார். இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், கோவை சரளா, மனோபாலா, போன்ற தமிழ் காமெடி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

mayilsamy 1

வண்டலூர் அருகே நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டார். இதுவே அவரது கடைசி நிகழ்ச்சி. சிவ பக்தரான நடிகர் மயில்சாமி அனைவருக்கும் உதவும் மனம் உள்ளவர் என்று அவரது உடன் இருந்த பல்வேறு மறக்கமுடியாத நினைவுகளை நேரலைகள் மற்றும் இணையதளம் வாயிலாக பிரபலங்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment