சிறப்பு ரயிலில் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளிக்கு ரயிலிலேயே பிறந்த குழந்தை!

சிறப்பு ரயிலில் பயணித்த கர்ப்பிணிக்கு ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்ததால், தாயும் சேயும் நலமாக உள்ளதாக மேற்கொண்டு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி 4ஆம் கட்ட ஊரடங்கை அறிவித்த நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமாக, வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தது.

அதில் பல தொழிலார்கள் தங்களின் சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்திலிருந்து பிகாருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ரயிலில் அவருடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில் தனாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழு, தாய் மற்றும் சேயை மீட்டு மேற்கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், பயணிகள் உதவியுடன் இந்த பிரசவம் நடந்துள்ளதாகவும், ரயில் வந்த உடனே நாங்கள் மேற்கொண்ட சிகிச்சையால் பிரசவத்தை நிறைவேற்றினோம். தற்பொழுது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.