மைதானத்தை ஒழுங்காக பராமரிக்கவில்லை! ஐசிசி மீது மைக்கேல் வாகன் குற்றச்சாட்டு.!

மெல்போர்ன் மைதானம் கடந்த 2 நாளாக ஏன் முழுதும் மூடி வைக்கப்பட வில்லை என்று மைக்கேல் வாகன், ஐசிசி மீது குற்றம் சாட்டியுள்ளார். 

ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மெல்போர்னில் நடைபெற வேண்டிய இரண்டு சூப்பர்-12 போட்டிகள் மழை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மற்றும் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய போட்டி ஆகிய இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டது.

இதனால் இந்த 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், மெல்போர்னில் இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, ஒழுங்கான பராமரிப்பு நடவடிக்கைகள் மெல்போர்னில் மேற்கொள்ளப்படவில்லை என ஐசிசியை குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியாவில் தற்போது மழைக்காலம், மேலும் மெல்போர்ன் மைதானத்தில் மேற்கூரை இருக்கிறது பிறகு ஏன் அதை பயன்படுத்தவில்லை. இரண்டு நாளாக மைதானத்தை ஏன் முழுவதுமாக மூட வில்லை என்று அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மேலும் வாகன், இலங்கை மைதானங்களில் இது போன்று மழைக் காலங்களில் அவர்கள் மைதானங்களை ஒழுங்காக பராமரித்து வருகின்றனர், விரைவில் அங்கு ஆட்டம் தொடங்கப்பட்டுவிடும், மேல்போர்னில் ஏன் அப்படி தொடங்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment